சுனைனாவின் ஆக்கிரமிப்பில் ‘ரெஜினா’ ட்ரெய்லர் எப்படி?
சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்துக்குப் பிறகு நடிகை சுனைனா நடிப்பில் வெளியான உள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். படத்துக்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - பின்னணியில் பவா செல்லதுரையின் குரல் ஒலிக்க, மர்மங்கள் நிறைந்த காட்சிகள் காட்டப்படுகின்றன. எல்லா ஃப்ரேம்களிலும் சுனைனா நீக்கமற நிறைந்திருப்பதன் மூலம் படம் அவரைச் சுற்றியே நகர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆக்ரோஷம், அழுகை, கொலை என ரத்தமும், சதையுமாக கட் செய்யப்பட்டுள்ள ட்ரெய்லர் படத்தின் தன்மையை உணர்த்துகிறது. சதீஷ்நாயரின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
ட்ரெய்லர் வீடியோ:
