தமிழ் சினிமா
பெல் என்ன கதை?
சென்னை: இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் படமாக ‘பெல்’ உருவாகி இருக்கிறது. இதை பீட்டர் ராஜ் தயாரித்துள்ளார். வெயிலோன் கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை வெங்கட் புவன் இயக்கியுள்ளார். குரு சோமசுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். வெங்கட் புவன் கூறும்போது, “பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது சீடர்களிடம் சொல்லி பாதுகாக்கக் கட்டளையிடுகிறார். அதைப் பாதுகாப்பதில் நடந்த போராட்டம்தான் கதை” என்றார்.
