Published : 20 Aug 2014 10:34 AM
Last Updated : 20 Aug 2014 10:34 AM

ராகிங் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆளுநர் வலியுறுத்தல்

ராகிங் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தி னார்.

ராகிங் ஒழிப்பு கண்காணிப்புக் குழுவின் 5-வது ஆய்வுக்கூட்டம், பல்கலைக்கழகங்களின் வேந்த ரான ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் செவ்வாய்கிழமை நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண் டார். கூட்டத்தில் ஆளுநர் பேசியதாவது:

ராகிங் செயல்களில் ஈடுபடு பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ராகிங் சம்பவமே நடக்காத தமிழகத்தை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டு ராகிங் தொடர்பாக 34 புகார்கள் பதிவாகியுள்ளன.

கல்லூரிக்கு வெளியே இயங்கும் தனியார் விடுதிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். ராகிங் சம்பவம் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு மிகவும் அவசியம்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.

அமைச்சர் பழனியப்பன் பேசும்போது, “கடந்த ஓராண்டில் ஒரு சில சிறிய சம்பவங்களைத் தவிர பெரிய அளவில் ராகிங் எதுவும் கல்லூரிகளிலோ, பல் கலைக்கழகங்களிலோ நடக்க வில்லை. கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடும் கண்காணிப்பே இதற்கு காரணம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கான சூழல் நிலவுதால் அவர்கள் ராகிங் உள்பட தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை முதன் மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி ராமானுஜம், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த்குமார் சின்ஹா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x