

சென்னை: கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (மார்க்கெட்டிங்) அடிப்படைகள் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு, ஜன.7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளான மெஷின் லேர்னிங், சாட்ஜிபிடி போன்ற லார்ஜ் லாங்க்வேஜ் மாதிரிகள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.
பயிற்சி வகுப்பில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
வெளியூர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.editn.tn.gov.in என்ற இணையதளத்திலும், 9360221280, 9840114680 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.