எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு

எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிப் பணியிடங்களுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

தகுதியான பட்டதாரிகள் இணையம் வழியாக மே 3 வரை விண்ணப்பிக்கலாம். உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in