

கடலூர்: திட்டக்குடியில் நாளை மறுநாள் (ஏப்.1) மகளிர் திட்டம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம்வேலை வாய்ப்பில்லாத இளையோருக்கு (இருபாலரும்) வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் திட்டக்குடி ஸ்ரீ சொர்ணம் ஆறுமுகம் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளையோருக்கும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளையோருக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படவுள்ளது.
தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன்இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.
இதர தகவல்களுக்கு “மகளிர் திட்ட அலுவலகம், பூமாலை வணிக வளாகம், பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் கடலூர் - 607001” என்ற முகவரியிலும் 04142-292143, உதவி திட்ட அலுவலர்களின் கைபேசி எண்கள்: 9444094261, 944409425 ஆகியவற் றிலும் தொடர்பு கொள்ளலாம்.