

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்து பேசியது: இந்த முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள், 11,785 காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை நடத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கட்டணமில்லா திறன் பயிற்சி, நான் முதல்வன் உட்பட பல திட்டங்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும், வேலை நாடுநர்களுக்கும் திறன்பயிற்சி அளித்து உயர் வருவாய் வேலைவாய்ப்பை பெற தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆகவே தகுதியான இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.