இந்திய ராணுவத்தில் ஆட்சேர்க்கை

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்க்கை
Updated on
1 min read

சென்னை: இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள், வழக்கமான இடங்களுக்கு ஆட்சேர்க்கை நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் வரும் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, ஆட்சேர்ப்பு பேரணி என 2 கட்டங்களாக நடத்தப்படும். தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், என்சிசி, ஐடி, ஐடிஐ டிப்ளமோ படித்தவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். உடற்தகுதி, உடல் அளவீட்டு தேர்வு, மருத்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என சென்னை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in