பிளஸ் 2, பார்மஸி படித்தவர்கள் விமானப் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் கி.செந்தில்ராஜ் | கோப்புப் படம்
ஆட்சியர் கி.செந்தில்ராஜ் | கோப்புப் படம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் பிப்.1, 2, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணிவரை நடைபெற உள்ளது.

இதில்ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம்ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பிப். 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். 27.06.2002 முதல் 27.06.2006 வரையான காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

டிப்ளமோ பார்மஸி அல்லது பிஎஸ்சி பார்மஸி படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.7,8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். திருமணமாகாதவர்கள் 27.06.1999 முதல் 27.06.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27.06.1999 முதல் 27.06.2002 வரையான காலத்தில் பிறந்த வராகவும் இருக்க வேண்டும்.

பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சியின் முடித்து பணியில் சேர்ந்தவுடன் ஊதியம் ரூ.26,900 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு https://airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தேர்வு முறை மற்றும் தேர்வு நாளன்று எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும். வாட்ஸ்அப் எண் 9942503151-ல்செய்தி அனுப்பியும் இந்த படிவத்தை பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in