

தருமபுரி: தருமபுரியில் வரும் 21-ம் தேதி ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா மற்றும் ஸ்ரீவிஜய் வித்யாலயா கலைக் கல்லூரி ஆகியவை சார்பில், வரும் 21-ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில், வேலையற்றஇளையோர் பங்கு பெறலாம். அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நல்லம்பள்ளி அருகே ஸ்ரீ விஜய் வித்யாலயா கலைக் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்ட 35 வயதுக்கு உட்பட்ட எட்டாம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், இளநிலை, முதுநிலை பட்டம், பொறியியல் பட்டம் உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய இளையோர் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம்.