கடலூர் வேலைவாய்ப்பு மையத்தில் ஜன. 20-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் வேலைவாய்ப்பு மையத்தில் ஜன. 20-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published on

கடலூர்: கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.

எனவே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப் படும் பதிவுதாரர்களின் பதிவுஎண் வேலைவாய்ப்பு அலுவலகபதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. இவ்வாறு கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in