தேசிய சிறுதொழில் கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

தேசிய சிறுதொழில் கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

சென்னை: தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம் வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக்., இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்க வருபவர்கள் சுயவிவரக் குறிப்பு (பயோ டேட்டா), முகவரி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும், முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsic-register என்ற ஆன்லைன் லிங்க்கில் முன்பதிவு செய்ய வேண்டும்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் எண்: பி-24, என்எஸ்ஐசி-டெக்னிக்கல் சர்வீஸ் சென்டர், ஈக்காட்டுதாங்கல், சென்னை-600 032 என்ற முகவரியில் நடைபெறும். தேசிய சிறுதொழில் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in