

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதத்தின் 4-வதுவெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன்படி வரும் 28-ம் தேதி காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமுக்கு நேரில் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.