

புதுடெல்லி: 12 வெற்றியாளர்களுடன் டெய்லி ஹன்ட் மற்றும் ஏஎம்ஜி மீடியாவின் சிறந்த கதைசொல்லிகளுக்கான தேடல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிகழ்வின் இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தனர்.
மொத்தம் 20 பேர் இதில் தேர்வாகி இருந்தனர். அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை பரிசீலித்து வெற்றியாளர்களை நடுவர் குழு அறிவித்தது. வீடியோ மற்றும் பிரின்ட் என இரண்டு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு பிரிவிலும் வித்தியாசமான கன்டென்ட் மூலம் இந்தியாவை பிரதிபலிக்கும் கிரியேட்டர்களை அடையாளம் காணும் வகையில் #StoryForGlory முயற்சி முன்னெடுக்கப்பட்டது. சுமார் 1000 பேர் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அதில் சிறந்த 20 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 8 வார காலம் ஃபெல்லோஷிப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வார காலம் எம்.ஐ.சி.ஏ-வில் கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் சுமார் 6 வார காலம் தங்களது இறுதிப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஊடக நிறுவனத்தின் வழிகாட்டுதாலும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களது கதை சொல்லும் திறனை மேம்படுத்துவதில் கவனமாக இருந்தனர். அதாவது, இதழியலில் செய்தி சொல்லும் ஆற்றலை மேம்படுத்திக் கொண்டனர்.
தனித்துவமிக்க மக்களை குரலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பத்திரிகை துறையில் பயிற்சி அளிப்பது தான் StoryForGlory-ன் நோக்கம். டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சியில் இந்திய ஊடக சூழலை தரமானதாக வடிவமைக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என ‘டெய்லி ஹன்ட்’ நிறுவனர் வீரேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.