

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வை TNPSC track என்னும் தனியார் YouTube சேனல் நவ.19-ம் தேதி நடத்தவுள்ளது.
மிகவும் சவால் மிகுந்த தேர்வாக கருதப்படும் மேற்கண்ட தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற தேர்வர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக படிப்பவர்களுக்கு உதவும் வகையில் TNPSC track என்னும் தனியார் YouTube சேனல் செப்.17 முதல் நவ.12-ம் தேதி வரை அஞ்சல் வழியில் பட்டப்படிப்புத் தரத்தில் 15 மாதிரித் தேர்வுகளை நடத்தவுள்ளது.
இந்த தேர்வுகள் அனைத்தும் அஞ்சல் வழியில் நடைபெறுவதால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்க இயலும். கூடுதல் விவரங்களுக்கு 9003490650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.