மின்வாரிய களப் பணிக்காக விரைவில் 10,200 பேர் தேர்வு

மின்வாரிய களப் பணிக்காக விரைவில் 10,200 பேர் தேர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் (கணக்கு), 2,900 கள உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த சூழலில், கரோனா பொது முடக்கம், சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், இத்தேர்வை ரத்து செய்வதாக, மின்வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

இந்நிலையில், மின்கம்பம் நடுதல், கேபிள் பதிப்பு உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ள 10,200பேரை தேர்வு செய்ய மின்வாரியம்முடிவு செய்துள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் டிஎன்பிஎஸ்சி மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in