தாட்கோ, ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்பு
கடந்த 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பினை தாட்கோ மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டில் ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி (டிசைன் அண்ட் கம்ப்யூட்டிங்), தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிபிஏ மற்றும் பி.காம் பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோவின் இணையதளத்தையும் கூடுதல் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட தாட்கோ மேலாளரை 044-27665539, 9445029475 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
