சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி வாய்ப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற குறைந்த பட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

இவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான டிக்கெட் ஆகியவை அந்நாட்டு வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான, www.omcmanpower.com-ல் அறியலாம். மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய தகவல்களை 9566239685, 044 – 22505886, 22502267 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ‘ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பப் படிவம், தகுதிச் சான்றிதழ், அனுபவ் சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in