

சென்னை: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம் ஆக.17-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பார்த்தசாரதி கோயில் தெருவில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ள 18 வயது நிறைவடைந்தோர் பங்கேற்கலாம்.
இந்த விழிப்புணர்வு முகாமில், புதிய தொழில் தொடங்குவது, புதிய தொழிலை தேர்வு செய்வது, தொழில் முனைவோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள், வங்கியில் கடன் பெறுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்.
முகாமைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு தொழில் திட்டம் மற்றும் அதற்கு தயாராகும் பயிற்சி 3 நாட்களுக்கு வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 044-22252081 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.