

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஆக.21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் அக்னிபாதை திட்டத்தின் கீழ் நடைபெற உள்ளது.
முகாமில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.
இதில் பொதுப்பணி (Agniveer General Duty), தொழில்நுட்பம் (Technical), கிளர்க் (Clerk), தொழில்நுட்ப பண்டக காப்பாளர் (Store Keeper Technical), டிரேட்ஸ்மேன் (Tradesman) ஆகிய பணிகளுக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஜூலை 30-ம் தேதிக்குள் www.joindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண் 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை நேரிலோ அல்லது 04365-253042 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.