அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆள் தேர்வு

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆள் தேர்வு
Updated on
1 min read

சென்னை: அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆர்வமுள்ள, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் வரும் 26-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக doplichennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். படித்து விட்டு, வேலைவாய்ப்பு இல்லாத, சுயவேலை செய்யும் இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள்.

மேலும், காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய அறிவுத் திறன் ஆகியவை கூடுதல் தகுதிகளாகக் கருதப்படும்.

மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர், இந்த முகவர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி கிடையாது.

நேர்முகத் தேர்வு வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, வடபழனி அஞ்சலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in