Published : 07 Jul 2022 06:53 AM
Last Updated : 07 Jul 2022 06:53 AM

சாரதா கங்காதரன் கல்லூரியில் 16-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: பல்வேறு கல்வி நிலையங்களில் இறுதியாண்டு பயில்வோர் பங்கேற்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியில் வருகிற 16-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிக ளுக்காக 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகம் வெளி யிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு: சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். 2001-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இணைப்புக் கல்லூரியாகும்.

தற்போது 9 இளங்கலை மற்றும் 4 முதுகலை பட்டப்படிப்புகளில் 1500-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 80-க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்நத பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

பல்கலைக்கழக மானிய குழுவின் 12 (b) அந்தஸ்து பெற விண்ணப்பித்துள்ள முதல் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

2022 -ம் ஆண்டு மே மாதம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவினரால் இக்கல்லூரியின் தகுதி மற்றும் செயல்பாடுகளுக்கான மதிப் பீட்டில் ‘B ' என்ற தரச்சான்றினைப் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று இதுவரை 47 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இக்கல்லூரியில் வருகிற 16-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளஅனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

2022-23 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை இணையதள வாயிலாகவும், நேரடியாகவும் நடை பெற்று கொண்டிருக்கிறது. உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவ, மாண விகள் தாங்கள் விரும்பும் பாடத்தை இணைய தளத்தைப் பார்த்து தேர்வு செய்து இணையதளம் (www.sgc.edu.in)மற்றும் நேரடியாகவும் விண்ணப்பிக் கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0413 2280156, 9361678999 என்ற எண்ணிலும் (info@sgc.edu.in) என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x