

புதுடெல்லி: சென்னை தாம்பரம் மற்றும் பெங்களூரு, செகந்திரபாத்தில் உள்ள விமானப்படை பிரிவுகளில் காலியாக உள்ள குருப் “சி” சிவிலியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள 3 சமையலர், 1 வாகன ஓட்டுனர், 1 ஹவுஸ் கீப்பிங் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோல பெங்களூரு மற்றும் செகந்திராபாத்தில் உள்ள விமானப்படையின் பல்வேறு பிரிவுகளிலும் சமையலர், மருத்துவமனை ஆயா உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி
கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களுக்கு 18- 24 ஜூன் 2022 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.