

புதுடெல்லி: அக்னி பாதை திட்டம் குறித்து ராணுவ விவகார துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி, கடற்படை வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அனில் பூரி கூறும்போது, "வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். இதை கருத்தில் கொண்டு அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வு நடைமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. பழைய நடைமுறையே பின்பற்றப்படும்" என்றார்.
அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கூறும்போது, "அக்னி பாதை திட்டத்தின் கீழ் கடற்படைக்கு ஆள்சேர்ப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும். பழைய நடைமுறைகளின்படி ஆள்தேர்வு நடத்தப்படும்" என்றார்.