பெண்கள் உதவி மைய காலி பணியிடம்: விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி

பெண்கள் உதவி மைய காலி பணியிடம்: விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி
Updated on
1 min read

சென்னை: பெண்கள் உதவி மையத்தில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி இறுதி நாள் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தில் பணிபுரிய காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

ரூ.30 ஆயிரம் வரை ஊதியம்

அதன்படி மைய நிர்வாகி,மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பன்முக உதவியாளர், பாதுகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப மாதம் ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

இணையதள முகவரி

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://chennai.nic.in// இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து, வருகிற 30-ம்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரியில் நேரடியாகவோ chndswo.4568@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in