

சென்னை: எல் அண்ட் டி நிறுவனத்தின் ஆன்லைன் கல்வி நிறுவனமானது (L&T EduTech), தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு நிறுவனம் சார்ந்த திறன்களை பயிற்றுவிக்கும் நோக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, எல் அண்ட் டி கல்வி நிறுவனம் உருவாக்கும் பயிற்சி வகுப்புகள், ஏஐசிடிஇ தளத்தில் பதிவேற்றப்படும். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் இந்தப் பாடங்களைப் படித்துக் கொள்ளலாம். அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில்நிறுவனத்துக்கு தேவையான பயிற்சி வழங்கவும் எல் அண்ட் டியின் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எல் அண்ட் டி கல்வி நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு மாணவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பையும் பெருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.