தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்ரல் 29) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சிகல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்துஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய இந்தமுகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461 234 0159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in