வேலூர்: 22 கால்நடை உதவியாளர் பணிக்கு 5,000+ பட்டதாரிகள் விண்ணப்பம்

வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேற்று நேர்காணல் நடைபெற்றது.  படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேற்று நேர்காணல் நடைபெற்றது. படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலி யாக உள்ள 22 கால்நடை உதவியாளர் பணிக்கு சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து, அவர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. தினசரி சுமார் 700 முதல் 800 பேர் வீதம் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் முதல் நாளான நேற்று நேர்காணல் தொடங்கியது. இதில், வேலூர் மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் நேர்காணல் நடைபெற்றது.

முதல் நாள் நேர்காணலில் பங்கேற்ற பலர் முதுநிலை பட்ட தாரிகள், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் பங்கேற்றனர். பட்டதாரிகள் பலரும் டிப்-டாப் உடையில் ஷூ அணிந்து சைக்கிள் ஓட்டியும், மாடுகளை பிடித்துச் சென்று கட்டுதல் போன்ற பணிகளை செய்து காண்பித்தனர்.

அதேபோல், இளம் பெண்கள் பலரும் நேர்காணலில் பங்கேற்று மாடுகளை பிடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துமனை களில் கால்நடை உதவியாளர் பணிக்கு ஆரம்ப சம்பளமே ரூ.20 ஆயிரம் கிடைக்கும்.

இவர்கள் மருத்து வமனைகளில் மருத்துவர் களுக்கு உதவியாக இருந்து கால் நடைகளை கையாள்வதுதான் பிரதான பணி. மொத்தம் 22 பதவிக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அடுத்த திங்கட்கிழமை வரை 7 நாட்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in