திண்டிவனத்தில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published on

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 26-ம்தேதி திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், " www.tnprivatejobs.tn.gov.in" என்ற இணையதள முகவரியில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு(Resume) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களை 04146-226417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in