கவுண்டம்பாளையத்தில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

கவுண்டம்பாளையத்தில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16-ம் தேதி (நாளை) பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தேர்வு செய்ய உள்ளது. இதில், 2020, 2021-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.

வயதுவரம்பு 18 முதல் 20 வயது வரையாகும். இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் அன்றையதினம் காலை 10.30 மணிக்கு கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, தகுந்த கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் ஓசூரில் உள்ள டாடா நிறுவனத்தில் தங்கி பணிபுரிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in