திண்டுக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை (மார்ச் 11), மார்ச் 18, மார்ச் 25 ஆகிய தினங்களில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளன.

இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிவரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச் சான்றுகள் மற்றும் அதன் நகலுடன் நேரில் பங்கேற்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in