

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ‘அடையாளம்’ அமைப்பு மூலம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 2-ம் நாளாக இன்றும் நடைபெறுகின்றன.
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமாரின் சமூக முன்னெடுப்பான ‘அடையாளம்’ மூலம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் சமூகம் மற்றும் பொரு ளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக தமி ழகம் முழுவதும் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே மாதம் நடை பெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக நேரடி வகுப்புகள் தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெறவுள்ளன.
அதனையொட்டி “அடையாளம்” இலவச டிஎன்பிஎஸ்சி 2 நாள் பயிற்சி மதுரை நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று தொடங் கியது.
இதன் தொடக்க விழா கல்லூரியின் தலைவர் ஜி.கரிக்கோல்ராஜ் தலை மையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கே.கே.சந்தோஷ பாண் டியன், முதல்வர் பொறுப்பு ஆர்.ராஜேஸ்வரபழனிச்சாமி, அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல டீன் கே.லிங்கதுரை, மதுரை மண்டல வேலைவாய்ப்புத் துறை இணை இயக்குநர் ராமநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வருமான வரி கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் பயிற்சி அளித்தார்.
இதில் அனைத்து பாடங்களின் விரிவான தகவல்கள், மாதிரித் தேர்வு நடத்தப்படும்.
மதுரையைத் தொடர்ந்து திண்டுக் கல், புதுச்சேரி, சென்னை, கோவை ஆகிய மண்டலங்களில் உள்ள நகரங் களில் வரும் வாரங்களில் பயிற்சி நடைபெறும். பயிற்சி தொடர்பான தகவல்கள் www.adaiyalam2022.org என்ற இணையதளத்தில் வெளி யிடப்படும்.