

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் 116 இடங்கள் மற்றும் உதவி பிரிவு அலுவலர், வருவாய் உதவியாளர், ஊரக வளர்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பதவி களில் 5,413 இடங்களை நிரப்பும் வகையில் ஒருங் கிணைந்த குரூப்-2, குரூப்-2-ஏதேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று காலை வெளியிடப்பட்டது.
முதலில் முதல்நிலைத் தேர்வும், தொடர்ந்து பிரதான (மெயின்) தேர்வும், இறுதியில் நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். குரூப்-2-ஏ பிரிவு பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
முதல்நிலைத் தேர்வு வரும் மே 21-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. வரும் மார்ச் 23-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத் திட்டமும் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.