வேலை வாய்ப்பு
கிண்டியில் எம்எஸ்எம்இ சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிப்.9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, எம்எஸ்எம்இ வளாகம், எண்.65/1, ஜிஎஸ்டி சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் இந்த பயிற்சி நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.10 ஆயிரம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களுக்கு 96526 11022, 88077 00611, 88077 00699 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
