Published : 22 Jan 2022 01:18 PM
Last Updated : 22 Jan 2022 01:18 PM

கள்ளக்குறிச்சி: இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்ட இளை ஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்என்ற விகிதத்தில் தகுதி வாய்ந்தநபர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண் டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். 35 முதல் 65-க்கு வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.

விண்ணப்பதாரர்கள் நியமனத் தில் ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். விண்ணப்ப படிவத்தினை விழுப்பு ரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் -156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதாரெட்டி, விழுப்புரம் - 605 401, என்ற முகவரியில் பெற்று விண்ணப்பிக்கலாம். 04146 - 290659 என்ற தொலைபேசி எண்ணிலும், dcpuvpm1@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் எனத் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x