

கோவில்பட்டி: கயத்தாறு வட்டார தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மையத்தில் வட்டார அளவிலான தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புதிறன் முகாம் நடைபெற்றது. 28-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர்.
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட இயக்குநர் வீரபுத்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு ஆகியோர் முன்னிலைவகித்தனர். உதவி திட்ட அலுவலர் பிரியங்கா வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.