Published : 22 Jul 2021 01:10 PM
Last Updated : 22 Jul 2021 01:10 PM

கோவை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியிடங்கள்: ஆக.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற மருந்தாளுநர்கள், லேப் டெக்னீஷியன், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பெ.கிருஷ்ணா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், லேப் டெக்னீஷியன், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள், கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்குத் தற்காலிகமாக மாதம் ரூ.12,000 வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அதன்படி மருந்தாளுநர் 17 பேர், லேப் டெக்னீஷியன் 17 பேர், நுண்கதிர் படப்பிடிப்பாளர் 17 பேர் ஆகியோர் தேவைப்படுகிறார்கள். பணியிடங்களுக்குத் தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்''.

இவ்வாறு பெ.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x