வேலை வேண்டுமா?- மத்திய அரசுப் பணிகளில் ரூ.1.51 லட்சம் வரை ஊதியம்

வேலை வேண்டுமா?- மத்திய அரசுப் பணிகளில் ரூ.1.51 லட்சம் வரை ஊதியம்
Updated on
1 min read

தேசியப் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் பணிகளில் பணியாற்றத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய பழங்குடிகள் நல அமைச்சகத்தின் கீழ் தேசியப் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் க்ரூப் பி மற்றும் க்ரூப் சி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்:

Assistant Commissioner (Administrative) - 02
Assistant Commissioner (Finance)- 01
ஊதியம்: ரூ.47,600- ரூ.1,51,100/

Office Superintendent (Finance)- 02
ஊதியம்: ரூ.44,900- ரூ.1,42,400/-

Stenographer Grade – I - 01
ஊதியம்: ரூ.35,400- ரூ.1,12,400/-

Stenographer Grade – II - 02
Office Assistant - 04
ஊதியம்: ரூ.25,500- ரூ.81,100/

Multi-Tasking Staff (MTS)
ஊதியம்: ரூ.18,000- ரூ.56,900/

தகுதி: பணிக்கு ஏற்ப 10, 12-ம் வகுப்புத் தேர்ச்சி, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் திறன்கள் முதல் 3 பணியிடங்களுக்கு இளங்கலை, முதுகலைப் படிப்புகளோடு சம்பந்தப்பட்ட துறை அனுபவம்.

வயது: 30.12.2020 தேதியில் 27 முதல் 40 வயது வரை கொண்டவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவின்படி தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: கணினிவழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 4/2/2021 நள்ளிரவு 11.59 வரை

விண்ணப்பிக்க: https://tribal.nic.in/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in