

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தில் திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான கல்வித் தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கு உரிய விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை https://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள், உரிய படிவத்தில் 09.10.2020 மாலை 05.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும்.
செயலாளர்,
மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம்,
சமூகப் பாதுகாப்புத் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லீஸ், சென்னை-10.
தொலைபேசி: 044-26421358''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.