10,978 அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு: ரூ.52 ஆயிரம் வரை சம்பளம்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

10,978 அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு: ரூ.52 ஆயிரம் வரை சம்பளம்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Published on

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாகச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு முறை:
* எழுத்துத்தேர்வு (80 மதிப்பெண்கள்) - டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட வாரியாகத் தேர்வு நடைபெறும்.
* உடற்கூறு அளத்தல் (தகுதித் தேர்வு)
* உடல் தகுதித்தேர்வு (தகுதித் தேர்வு)
* உடற்திறன் போட்டிகள் (15 மதிப்பெண்கள்)
* சிறப்பு மதிப்பெண்கள் (5 மதிப்பெண்கள்)

சம்பளம்:

ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை

கல்வித் தகுதி:

10-ம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை)

எப்படி விண்ணப்பிப்பது?
www.tnusrbonline.org எனும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 விண்ணப்பிக்கக் கடைசி நாள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnusrbonline.org/pdfs/CR_2020_Brochure.pdf

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in