Published : 08 Jan 2020 04:40 PM
Last Updated : 08 Jan 2020 04:40 PM

பாரத ஸ்டேட் வங்கியில் 8000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்: டிகிரி முடித்திருந்தால் போதும்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான 8,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன. 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஜன.26-ம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு நடைபெறும் தற்காலிகத் தேதி

பிப்ரவரி 11-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தற்காலிகத் தேதியாகவும், ஏப்ரல் 2-வது வாரத்தில் முதன்மைத் தேர்வு நடைபெறும் தற்காலியாகத் தேதியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரைக்குள் விண்ணப்பதாரர்கள் இருப்பது அவசியம். அல்லது 01.01.2000 தேதிக்கு முன்னும், 02.01.1992-க்குப் பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்

தொடக்க ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.13 ஆயிரத்து 75 முதல் அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 450 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம்

எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்/மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. பொது/பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்/பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தேர்வுக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: செலுத்திய தேர்வுக் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற இயலாது. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

கல்வித் தகுதி

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம்.

குறிப்பு: கடைசி வருடம் கல்லூரியில் படிப்பவர்களும் இத்தேர்வு எழுதத் தகுதியானவர்கள்

தேர்வு முறை

இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வானது மூன்று பிரிவுகளின் கீழ், 100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இத்தேர்வு ஒரு மணிநேரத்தில் முடிவடையும்.

முதன்மைத் தேர்வானது நான்கு பிரிவுகளின் கீழ் 190 கேள்விகள், 200 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இத்தேர்வு 2 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும்.

குறிப்பு: தவறான மதிப்பெண்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். ஆன்லைனில் www.sbi.co.in/careers/ongoing-recruitment.html - என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், https://ibpsonline.ibps.in/sbijassdec19/ , https://www.sbi.co.in/web/careers/current-openings ஆகிய இணைப்புகளைச் சொடுக்கி, மேலும் விவரங்களை அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x