Published : 28 Sep 2019 18:24 pm

Updated : 28 Sep 2019 18:24 pm

 

Published : 28 Sep 2019 06:24 PM
Last Updated : 28 Sep 2019 06:24 PM

வேலை வேண்டுமா?- ரிசர்வ் வங்கியில் பணி; காலியிடங்கள் 199

recruitment-in-rbi

இந்திய ரிசர்வ் வங்கியில் க்ரூப் பி பிரிவில், 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: Officers inGrade 'B' (DR) - (General)
கல்வித்தகுதி: 10,12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரியில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் போதும்)
காலியிடங்கள்: 217

2. வேலையின் பெயர்: Officers in Grade 'B' (DR) - DEPR
கல்வித்தகுதி: பொருளாதாரம் அல்லது பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். அல்லது எம்பிஏ (நிதிப்பிரிவு) படிப்பில் 55% மதிப்பெண்கள்.

3. வேலையின் பெயர்: Officers in Grade 'B' (DR) - DSIM
கல்வித்தகுதி: பொருளியல் அல்லது பொருளியல் தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். அல்லது கணிதம் முதுகலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்கள்

4. காலியிடங்கள்: 199

5. வயது வரம்பு: 01.08.2019-ல் 21முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். எம்பில் படித்தவர்களுக்கு 2 வருடங்களும் பிஎச்டி முடித்தவர்களுக்கு 4 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

6. சம்பளம்: ரூ.35,150 - ரூ. 77,208

7. தேர்வு முறை:
1. முதனிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

ஆன்லைன் எழுத்துத் தேர்வு:
பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/rbigrbdsep19/?_ga=2.39950498.1079348801.1569671273-598418090.1561965683 என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.850. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.100.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.09.2019

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3766&_ga=2.216625302.1079348801.1569671273-598418090.1561965683 என்ற இணையதளத்தை அணுகலாம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

RBIRecruitmentJobGrade bவேலைரிசர்வ் வங்கி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author