

இந்தியக் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) 8 ஆயிரம் உதவியாளர் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன்படி, வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மத்திய, தென் மற்றும் மேற்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென் மண்டலத்தில் சென்னை 1 மற்றும் 2, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு 15 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் விதிவிலக்கு உண்டு.
கல்வித் தகுதி:
எதாவது ஒரு இளங்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைனில் மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும். ரூ.510 + ஜிஎஸ்டி + வங்கிப் பரிமாற்றக் கட்டணம்
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி + வங்கிப் பரிமாற்றக் கட்டணம்
ஊதியம்: ரூ.14,435 முதல் ரூ.40,080 வரை
தேர்வு முறை:
1. ஆரம்பகட்டத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.10.2019
எந்த மாவட்டத்தில் எவ்வளவு பணியிடங்கள்?
http://licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 என்ற முகவரியை க்ளிக் செய்து பார்க்கவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
எல்ஐசியின் https://ibpsonline.ibps.in/licastaug19/ என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்திய பிறகே விண்ணப்பிக்க முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/licastaug19/uploads/loadpdf.php?file=k7m5p+fQ15e0w87U1N3G39CXo5S+pdGTpaeV6Kqlcg==&t=zLjIrOLC1Ni005njxc8=#toolbar=0&navpanes=0 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கலாம்.