க.சே.ரமணி பிரபா தேவி

Published : 26 Aug 2019 15:20 pm

Updated : : 26 Aug 2019 15:27 pm

 

வேலை வேண்டுமா?- ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்- ரூ.2.2 லட்சம் வரை ஊதியம்

jipmer-recruitment
படம்: ஷட்டர்ஸ்டாக்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. வேலையின் பெயர்: பேராசிரியர்கள்
2. காலியிடங்கள்: 19
3. ஊதியம்: ரூ.1,68,900 முதல் ரூ.2,20,400 வரை
4. வயது வரம்பு: 30.08.2019-ல் 58 வயதுக்குள் இருக்கவேண்டும்.
*
1. வேலையின் பெயர்: உதவிப் பேராசிரியர்கள்
2. காலியிடங்கள்: 24
3. ஊதியம்: ரூ.1,01,500 முதல் ரூ.1,67,400 வரை
4. வயது வரம்பு: 30.08.2019-ல் 50 வயதுக்குள் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: காலியிடம் உள்ள பாடப்பிரிவில் கல்வித்தகுதி பெற்று, பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.500. ( எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250)
மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://jipmer.edu.in/announcement/jobs என்ற இணையதள முகவரியை அணுகலாம்.




****

அதேபோல ஜிப்மரிலேயே நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியரைத் தேர்வு செய்யும் பணிக்காகவும் காலியிடங்கள் உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: உதவிப் பேராசிரியர்கள்
2. காலியிடங்கள்: 7
3. ஊதியம்: ரூ.1,01,500
4. வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்கவேண்டும்.
*
1. வேலையின் பெயர்: Embryologist in Obsterics & Gynaecology
2. காலியிடங்கள்: 1
3. ஊதியம்: ரூ.60,000
4. வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.

தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29.08.2019

விண்ணப்பக் கட்டணம்
ரூ.500. ( எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250)
மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் http://jipmer.edu.in/sites/default/files/Application.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துகொள்ளவும். தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் காப்பிகளை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://jipmer.edu.in/sites/default/files/Website%20Advt.%20AP%20%26%20Emb.%20on%20contract%20basis.pdf என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து படிக்கலாம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

JobJipmerRecruitmentவேலைஜிப்மர்பேராசிரியர்சம்பளம்




Popular Articles

You May Like

More From This Category

More From this Author