Published : 16 Aug 2019 02:09 PM
Last Updated : 16 Aug 2019 02:09 PM

வேலை வேண்டுமா?- பொறியாளர்களுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள் 189

சென்னையில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிப் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியான, திருமணமாகாத ஆண்கள், பெண்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: Service Commission Officers (Tech)
2. காலியிடங்கள்: 189
3. ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
4. கல்வித் தகுதி: காலியிடம் உள்ள பாடப்பிரிவில் B.E./ B.Tech படிப்பில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பட்டம் பெறும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

5. வயது வரம்பு: 20 முதல் 27 வயதுக்குள் இருக்கவேண்டும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் மனைவியாக இருந்தால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

6.தேர்வு முறை:
பொறியியல் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வில் Psychological Test, Group Test மற்றும் Medical Test ஆகியவை நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாம்கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, PG Diploma in Defence Management and Strategic Studies (சென்னை பல்கலைக்கழகம் அளிக்கும் பயிற்சி) என்னும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் இந்திய ராணுவத்தில் லெஃப்டினென்ட் அதிகாரியாகப் பணியில் அமர்த்தப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் http://www.joinindianarmy.nic.in/login.htm என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துகொள்ளவும். தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் காப்பிகளை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tech_54.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x