

மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் IRCTC-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. வேலையின் பெயர்: Supervisor (Hospitality)
2. காலியிடங்கள்: 85
3. ஊதியம்: ரூ.25 ஆயிரம், தினசரிப் படி மற்றும் இதர சலுகைகள்
4. பணியிடம்: இந்தியா முழுவதும்
5. வயது: 30 வயதுக்குள் இருக்கவேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிப்படியும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
6.கல்வித் தகுதி: B.Sc. படிப்பில் Hospitality & Hotel Administration பட்டம் பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 14.08.2019 முதல் 24.08.2019 வரை
நடைபெறும் இடம்: சத்தீஸ்கர், ஒடிசா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், விஜயவாடா.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் http://www.irctc.com/DownloadDocuments?workflow=geDocumentsByCategoryRpt_02&doc_cat_id=11 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துகொள்ளவும். தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் காப்பிகளை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://www.irctc.com/careers_En.jsp என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in