வேலை வேண்டுமா?- ஆதார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பணி

வேலை வேண்டுமா?- ஆதார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பணி
Updated on
1 min read

UIDAI எனப்படும் ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். தகுதியான நபர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மூத்த கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், தனிச் செயலர், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர்

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. வேலையின் பெயர்: மூத்த கணக்கு அலுவலர் (Senior Accounts Officer)
2. கல்வித்தகுதி:  சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம்
3. காலியிடங்கள்: 1
4. பணி அனுபவம்: 2 - 5 வருடங்கள்
5. ஊதியம்: ரூ.15,600- ரூ.39,100 வரை
*
1. வேலையின் பெயர்: உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer)
2. கல்வித்தகுதி:  சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம்
3. காலியிடங்கள்: 1
4. பணி அனுபவம்: 3 - 5 வருடங்கள்
5. ஊதியம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை
*
1. வேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)
2. கல்வித்தகுதி:  பட்டதாரியாக இருக்கவேண்டும். (ஏதாவது ஓர் இளங்கலை அல்லது முதுகலை), கம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.
3. காலியிடங்கள்: 3
4. பணி அனுபவம்: 2 - 5 வருடங்கள்
5. ஊதியம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை
*
1. வேலையின் பெயர்:  பிரிவு அலுவலர் (Section Officer)
2. கல்வித்தகுதி:  பட்டதாரியாக இருக்கவேண்டும். (ஏதாவது ஓர் இளங்கலை அல்லது முதுகலை)
3. காலியிடங்கள்: 1
*
1. வேலையின் பெயர்:  உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)
2. கல்வித்தகுதி:  பட்டதாரியாக இருக்கவேண்டும். (ஏதாவது ஓர் இளங்கலை அல்லது முதுகலை)
3. காலியிடங்கள்: 2

பணியிடம்: சண்டிகர்
வயது வரம்பு: 56

தேர்வு முறை:
எழுத்து அல்லது நேரடித் தேர்வு.

எப்படி விண்ணப்பிப்பது?
https://uidai.gov.in/about-uidai/work-with-uidai.html என்ற இணையதளத்துக்குச் சென்று, அதில் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2019

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://uidai.gov.in/images/career/Vacancy-circular-10072019.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம். 

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in