

இந்திய ஆயுதப் படையில் (சஷாஸ்த்ரா சீமா பால்) விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றன. தகுதியான நபர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கைப்பந்து, கால்பந்து,ஹாக்கி, தடகளம், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ, பளு தூக்குதல், பாடி பில்டிங், குதிரை சவாரி, சைக்கிளிங், பேட்மிண்டன், டேக்வாண்டோ, நீச்சல் ஆகிய போட்டிகளில் தேசிய அல்லது சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. வேலையின் பெயர்: கான்ஸ்டபிள்
2. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, காலியிடம் உள்ள விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் .
காலியிடங்கள்: 150
ஊதியம்: ரூ.21,700- ரூ.69,100 வரை
வயது வரம்பு: 18 - 23 (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு வயது தளர்வு உண்டு)
தேர்வு முறை:
1. உயரம், எடை, மார்பு அளவு மற்றும் உடற்தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. விளையாட்டுத் தகுதியை சரிபார்த்தல்
4. முழு மருத்துவத் தகுதி
எப்படி விண்ணப்பிப்பது?
https://ssb.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.08.2019
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://ssb.nic.in/WriteReadData/LINKS/356800281e1c-e2c0-405b-adab-1d47e72c4213.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in