

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூடான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணியாற்ற நர்சுகள் (ஆண் மற்றும் பெண்) தேவைப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டு்ம. குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 23 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நர்சுகள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற இணைப்பில் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ் பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நவ.
3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணை்யதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். மேலும், 63791 79200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.