

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே 12 முதல் 14ம் தேதி வரையும் அதைத் தொடர்ந்து மே 22ம் தேதியும் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரி பார்ப்பின் போது தேர்வர்க ளின் கல்விச் சான்றிதழ்கள், இதர முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது தமிழ் வழி காலிப் பணியிடங்களுக்கு மட்டும் தற்காலிக தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.